Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 25

1யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 1

2என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், 1 நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; 1 என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். 1

3உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; 1 காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 1

4யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; 1 உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். 1

5உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; 1 நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், 1 உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். 1

6யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், 1 அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. 1

7என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; 1 யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். 1

8யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; 1 ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். 1

9சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, 1 சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். 1

10யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, 1 அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. 1

11யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; 1 உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும். 1

12யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ 1 அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். 1

13அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; 1 அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும். 1

14யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; 1 அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். 1

15என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன; 1 அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். 1

16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; 1 நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். 1

17என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; 1 என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். 1

18என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, 1 என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். 1

19என்னுடைய எதிரிகளைப் பாரும்; 1 அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். 1

20என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; 1 நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன். 1

21உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; 1 நான் உமக்குக் காத்திருக்கிறேன். 1

22தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.

← Psalms 24Read In The App, Free →Psalms 26 →

Study Psalms 25

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150