Psalms 27
1யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், 1 யாருக்குப் பயப்படுவேன்? 1 யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், 1 யாருக்கு பயப்படுவேன்? 1
2என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, 1 என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள். 1
3எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; 1 என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன். 1
4கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; 1 நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், 1 அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், 1 நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். 1
5தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, 1 என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். 1
6இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; 1 அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, 1 யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன். 1
7யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, 1 எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும்.
8என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, 1 உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது. 1
9உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; 1 நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; 1 நீரே எனக்கு உதவி செய்பவர்; 1 என்னுடைய இரட்சிப்பின் தேவனே, 1 என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும். 1
10என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், 1 யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். 1
11யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், 1 என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும். 1
12என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; 1 பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் 1 எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள். 1
13நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே 1 யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன் + 27:13 விசுவாசிக்காமல் இருந்தால் கெட்டுப்போயிருப்பேன். 1
14யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, 1 அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், 1 கர்த்தருக்கே காத்திரு.