Psalms 108
1தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; 1 நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; 1 என்னுடைய மகிமையும் பாடும். 1
2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், 1 நான் அதிகாலையில் விழிப்பேன். 1
3யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; 1 தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 1
4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், 1 உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது. 1
5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; 1 உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 1
6உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, 1 உமது வலதுகரத்தினால் இரட்சித்து, 1 எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும். 1
7தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், 1 ஆகையால் சந்தோஷப்படுவேன்; 1 சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். 1
8கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; 1 எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், 1 யூதா என்னுடைய செங்கோல். 1
9மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; 1 ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; 1 பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன். 1
10வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? 1 ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? 1
11எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? 1 எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ? 1
12இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; 1 மனிதனுடைய உதவி வீண். 1
13தேவனாலே வெற்றி பெறுவோம்; 1 அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.