Psalms 104
1என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; 1 என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; 1 மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். 1
2ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 1
3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, 1 மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார். 1
4தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், 1 தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார். 1
5பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார். 1
6அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; 1 மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது. 1
7அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, 1 உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது. 1
8அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, 1 நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. 1
9அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி 1 கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர். 1
10அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; 1 அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. 1
11அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; 1 அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். 1
12அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து, 1 கிளைகள் மேலிருந்து பாடும். 1
13தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; 1 உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது. 1
14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், 1 மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 1
15மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், 1 அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும், 1 மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார். 1
16யெகோவாவுடைய மரங்களும், 1 அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும். 1
17அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு. 1
18உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம். 1
19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; 1 சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும். 1
20நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்; 1 அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும். 1
21இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும். 1
22சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி, 1 தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும். 1
23அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும், 1 தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான். 1
24யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! 1 அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; 1 பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. 1
25பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; 1 அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு. 1
26அதிலே கப்பல்கள் ஓடும்; 1 அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. 1
27ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம் 1 உம்மை நோக்கிக் காத்திருக்கும். 1
28நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; 1 நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். 1
29நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; 1 நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, 1 தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும். 1
30நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்; 1 நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர். 1
31யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; 1 யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார். 1
32அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; 1 அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும். 1
33நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்; 1 நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன். 1
34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்; 1 நான் யெகோவாவுக்குள் மகிழுவேன். 1
35பாவிகள் பூமியிலிருந்து மறைந்து, 1 துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள். 1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று, 1 அல்லேலூயா.