Psalms 61
1தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, 1 என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும். 1
2என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது 1 பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். 1
3நீர் எனக்கு அடைக்கலமும், 1 எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர். 1
4நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; 1 உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா) 1
5தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; 1 உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். 1
6ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; 1 அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 1
7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; 1 தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். 1
8இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, 1 உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.