Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 138

1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; 1 தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 1

2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, 1 உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; 1 உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். 1

3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; 1 என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; 1

4யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் 1 உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். 1

5யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், 1 அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள். 1

6யெகோவா உயர்ந்தவராக இருந்தும், 1 தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; 1 மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். 1

7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; 1 என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; 1 உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். 1

8யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; 1 யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; 1 உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.

← Psalms 137Read In The App, Free →Psalms 139 →

Study Psalms 138

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150