Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 63

1தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; 1 வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, 1 என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது. 1

2இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, 1 உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். 1

3உயிரைவிட உமது கிருபை நல்லது; 1 என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும். 1

4என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து, 1 உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன். 1

5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; 1 என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். 1

6என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, 1 இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன். 1

7நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், 1 உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன். 1

8என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; 1 உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. 1

9என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ, 1 பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். 1

10அவர்கள் வாளால் விழுவார்கள்; 1 நரிகளுக்கு இரையாவார்கள். 1

11ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்; 1 தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள் 1 அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்; 1 பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.

← Psalms 62Read In The App, Free →Psalms 64 →

Study Psalms 63

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150