Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 136

1யெகோவாவை துதியுங்கள்; 1 அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 1

2தேவாதி தேவனைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

3கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

4ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

5வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

6தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது; 1

8பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது; 1

10எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

12வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

13சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

14அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

15பார்வோனையும் அவன் சேனைகளையும் 1 செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

16தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

17பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

18பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது.

19எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

20பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

21அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

22அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

24நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

25உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது. 1

26பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; 1 அவர் கிருபை என்றுமுள்ளது.

← Psalms 135Read In The App, Free →Psalms 137 →

Study Psalms 136

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150