Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 74

1தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? 1 உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? 1

2நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், 1 நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், 1 நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும். 1

3நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்; 1 பரிசுத்தஸ்தலத்திலே எதிரி அனைத்தையும் கெடுத்துப்போட்டான். 1

4உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, 1 தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். 1

5கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான். 1

6இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும், 1 சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள். 1

7உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, 1 உமது பெயரின் வாசஸ்தலத்தைத் தரைவரை இடித்து, 1 அசுத்தப்படுத்தினார்கள். 1

8அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, 1 தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். 1

9எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; 1 தீர்க்கதரிசியும் இல்லை; 1 இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. 1

10தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்? 1 பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? 1

11உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; 1 அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். 1

12பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற 1 தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா. 1

13தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, 1 தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின் + 74:13 இந்த கடல் பிராணி அனேக தலைகள் கொண்டதாக கருதப்படுகிறது. பார்க்க-சங்கீதம் 104:26, ஏசாயா 27:1 தலைகளை உடைத்தீர். 1

14தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, 1 அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர். 1

15ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; 1 மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர். 1

16பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; 1 தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். 1

17பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்; 1 கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர். 1

18யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும், 1 மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். 1

19உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்; 1 உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும். 1

20உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; 1 பூமியின் இருளான இடங்கள் 1 கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே. 1

21துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்; 1 சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும். 1

22தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; 1 மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும். 1

23உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்; 1 உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது.

← Psalms 73Read In The App, Free →Psalms 75 →

Study Psalms 74

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150