Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 16

1தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். 1

2என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி: 1 தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், 1 என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்; 1

3பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், 1 நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், 1 அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய். 1

4அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; 1 அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், 1 அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன். 1

5யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; 1 என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர். 1

6நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; 1 ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு. 1

7எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; 1 இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும். 1

8யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; 1 அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் 1 நான் அசைக்கப்படுவதில்லை. 1

9ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; 1 என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும். 1

10என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; 1 உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. 1

11வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; 1 உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், 1 உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

← Psalms 15Read In The App, Free →Psalms 17 →

Study Psalms 16

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150