Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 28

1என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; 1 நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 1

2நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, 1 என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். 1

3அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், 1 தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும். 1

4அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; 1 அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், 1 அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும். 1

5அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், 1 அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார். 1

6யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; 1 அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். 1

7யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; 1 என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; 1 ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; 1 என் பாடலினால் அவரைத் துதிப்பேன். 1

8யெகோவா அவர்களுடைய பெலன்; 1 அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர். 1

9தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; 1 அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

← Psalms 27Read In The App, Free →Psalms 29 →

Study Psalms 28

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150