Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 91

1உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் 1 சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 1

2நான் யெகோவாவை நோக்கி: 1 நீர் என்னுடைய அடைக்கலம், 1 என்னுடைய கோட்டை, என் தேவன், 1 நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். 1

3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், 1 பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். 1

4அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; 1 அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; 1 அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். 1

5இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும், 1

6இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், 1 மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய். 1

7உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், 1 உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், 1 அது உன்னை அணுகாது. 1

8உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய். 1

9எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை 1 உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய். 1

10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, 1 வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது. 1

11உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, 1 உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். 1

12உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு 1 அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். 1

13சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, 1 பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். 1

14அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; 1 என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் 1 அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். 1

15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், 1 நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்; 1 ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து, 1 அவனைக் கனப்படுத்துவேன். 1

16நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, 1 என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

← Psalms 90Read In The App, Free →Psalms 92 →

Study Psalms 91

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150