Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 115

1எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, 1 உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும். 1

2அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே 1 என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்? 1

3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; 1 தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார். 1

4அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், 1 மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. 1

5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; 1 அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 1

6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; 1 அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 1

7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; 1 அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; 1 தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 1

8அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், 1 அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 1

9இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; 1 அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 1

10ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; 1 அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 1

11யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, 1 யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார். 1

12யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், 1 அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், 1 அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார். 1

13யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், 1 சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார். 1

14யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார். 1

15வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 1

16வானங்கள் யெகோவாவுடையவைகள்; 1 பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். 1

17இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் 1 யெகோவாவை துதிக்கமாட்டார்கள். 1

18நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் 1 யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். 1 அல்லேலூயா.

← Psalms 114Read In The App, Free →Psalms 116 →

Study Psalms 115

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150