Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 41

1பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; 1 தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார். 1

2யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்; 1 பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்; 1 அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை. 1

3படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்; 1 அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார். 1

4யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்; 1 உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன், 1 என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். 1

5அவன் எப்பொழுது சாவான், 1 அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள். 1

6ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; 1 அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, 1 தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான். 1

7என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து, 1 எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து, 1

8தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; 1 படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். 1

9என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், 1 என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான். 1

10யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி, 1 நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும். 1

11என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால், 1 நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன். 1

12நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, 1 என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். 1

13இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள 1 எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர். 1 ஆமென், ஆமென்.

← Psalms 40Read In The App, Free →Psalms 42 →

Study Psalms 41

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150