Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 42

1மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, 1 தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 1

2என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது; 1 நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? 1

3உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், 1 இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது. 1

4முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து, 1 கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே; 1 இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. 1

5என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? 1 ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; 1 அவர் சமுகத்து இரட்சிப்பிற்காக நான் இன்னும் அவரைத் துதிப்பேன். 1

6என் தேவனே, என்னுடைய ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; 1 ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். 1

7உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; 1 உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. 1

8ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; 1 இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது; 1 என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன். 1

9நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி: 1 ஏன் என்னை மறந்தீர்? 1 எதிரியால் ஒடுக்கப்பட்டு, 1 நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். 1

10உன் தேவன் எங்கே என்று 1 என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, 1 என்னை நிந்திப்பது 1 என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. 1

11என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? 1 ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? 1 தேவனை நோக்கிக் காத்திரு; 1 என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

← Psalms 41Read In The App, Free →Psalms 43 →

Study Psalms 42

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150