Psalms 109
1நான் துதிக்கும் தேவனே, 1 மவுனமாக இருக்கவேண்டாம். 1
2துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், 1 எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; 1 பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள். 1
3பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, 1 காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள். 1
4என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், 1 நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன். 1
5நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், 1 என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள். 1
6அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், 1 சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும். 1
7அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; 1 அவனுடைய ஜெபம் பாவமாகட்டும். 1
8அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; 1 அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும். 1
9அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், 1 அவனுடைய மனைவி விதவையுமாகட்டும். 1
10அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, 1 தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும். 1
11கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; 1 அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும். 1
12அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், 1 அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும். 1
13அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; 1 இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும். 1
14அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், 1 அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும். 1
15அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; 1 அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும். 1
16அவன் தயவுசெய்ய நினைக்காமல், 1 ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, 1 மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. 1
17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; 1 அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், 1 அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும். 1
18சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; 1 அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், 1 அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். 1
19அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், 1 எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும். 1
20இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், 1 என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன். 1
21ஆண்டவராகிய யெகோவாவே, 1 நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, 1 உமது கிருபை நலமானதினால், 1 என்னை விடுவித்தருளும். 1
22நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், 1 என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. 1
23சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; 1 வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன். 1
24உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; 1 என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது. 1
25நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, 1 தங்களுடைய தலையை அசைக்கிறார்கள். 1
26என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; 1 உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும். 1
27இது உமது கரம் என்றும், யெகோவாவே, 1 தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. 1
28அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; 1 அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; 1 உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன். 1
29என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, 1 தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக. 1
30யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, 1 அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். 1
31தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி 1 அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.