Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 35

1யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, 1 என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும். 1

2நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து, 1 எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும். 1

3என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: 1 நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும். 1

4என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; 1 எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக. 1

5அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக; 1 யெகோவாவுடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. 1

6அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; 1 யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. 1

7காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; 1 காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். 1

8அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; 1 அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக. 1

9என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து, 1 அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். 1

10ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், 1 ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே, 1 என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும். 1

11கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள். 1

12நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; 1 என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள். 1

13அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; 1 நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; 1 என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை. 1

14நான் அவனை என்னுடைய நண்பனாகவும் 1 சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; 1 தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் 1 துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன். 1

15ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது 1 அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; 1 அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, 1 ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். 1

16அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு 1 சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள். 1

17ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? 1 என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். 1

18மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், 1 திரளான மக்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன். 1

19வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், 1 காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் 1 கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. 1

20அவர்கள் சமாதானமாகப் பேசாமல், 1 தேசத்திலே அமைதலாக இருக்கிறவர்களுக்கு விரோதமாக வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். 1

21எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, 1 ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள். 1

22யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்; 1 ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும். 1

23என் தேவனே, என் ஆண்டவரே, 1 எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். 1

24என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், 1 என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும். 1

25அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: 1 ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், 1 அவனை + 35:25 விழுங்கிவிட்டோம்என்று பேசாதபடிக்கும் செய்யும். 1

26எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, 1 எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் 1 அவமானத்தாலும் மூடப்படவேண்டும். 1

27என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் 1 கெம்பீரித்து மகிழ்ந்து, 1 தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை 1 உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும். 1

28என் நாவு உமது நீதியையும், 1 நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.

← Psalms 34Read In The App, Free →Psalms 36 →

Study Psalms 35

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150