Psalms 84
1சேனைகளின் யெகோவாவே, 1 உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 1
2என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது; 1 என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 1
3என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே, 1 உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும், 1 தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 1
4உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; 1 அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா) 1
5உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும், 1 தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். 1
6அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; 1 மழையும் குளங்களை நிரப்பும். 1
7அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, 1 சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். 1
8சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; 1 யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா) 1
9எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்; 1 நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும். 1
10ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; 1 துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட 1 என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். 1
11தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்; 1 யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்; 1 உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். 1
12சேனைகளின் யெகோவாவே, 1 உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.