Psalms 72
1தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், 1 ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். 1
2அவர் உம்முடைய மக்களை நீதியோடும், 1 உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். 1
3மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், 1 மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும். 1
4மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, 1 ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். 1
5சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். 1
6புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். 1
7அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; 1 சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். 1
8ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், 1 நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். 1
9வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; 1 அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள். 1
10தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; 1 ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். 1
11எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; 1 எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள். 1
12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். 1
13எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, 1 எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார். 1
14அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; 1 அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும். 1
15அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; 1 அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், 1 எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். 1
16பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; 1 அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; 1 பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள். 1
17அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; 1 சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; 1 மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், 1 எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள். 1
18இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; 1 அவரே அதிசயங்களைச் செய்கிறவர். 1
19அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; 1 பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. 1 ஆமென், ஆமென். 1
20ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.