Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 39

1என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய 1 வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். 1

2நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன், 1 நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; 1 ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது; 1

3என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; 1 நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; 1 அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன். 1

4யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், 1 என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். 1

5இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; 1 என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; 1 எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) 1

6நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; 1 வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். 1 யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான். 1

7இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை. 1

8என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், 1 மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம். 1

9நீரே இதைச் செய்தீர் என்று நான் 1 என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன். 1

10என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; 1 உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன். 1

11அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, 1 அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; 1 நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா) 1

12யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, 1 என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்; 1 என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்; 1 என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல 1 நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன். 1

13நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, 1 தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.

← Psalms 38Read In The App, Free →Psalms 40 →

Study Psalms 39

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150