Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 140

1யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; 1 கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும். 1

2அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, 1 யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். 1

3பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; 1 அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா) 1

4யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி 1 கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்; 1 அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். 1

5பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் 1 கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; 1 வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா) 1

6நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; 1 யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும். 1

7ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே, 1 யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர். 1

8யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; 1 அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா) 1

9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.

10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; 1 நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக. 1

11பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; 1 கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும். 1

12சிறுமையானவனின் வழக்கையும், 1 எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன். 1

13நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; 1 செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.

← Psalms 139Read In The App, Free →Psalms 141 →

Study Psalms 140

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150