Psalms 58
1மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ? 1 மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ? 1
2மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; 1 பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள். 1
3துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; 1 தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள். 1
4பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. 1
5பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள். 1
6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; 1 யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும். 1
7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; 1 அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது 1 அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும். 1
8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; 1 பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக. 1
9முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே 1 பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார். 1
10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; 1 அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். 1
11அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், 1 மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.