Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 80

1இஸ்ரவேலின் மேய்ப்பரே, 1 யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, 1 செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும். 1

2எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, 1 எங்களைக் காப்பாற்ற வந்தருளும். 1

3தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், 1 உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், 1 அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். 1

4சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் 1 எதுவரைக்கும் கோபங்கொள்வீர். 1

5கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், 1 மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். 1

6எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; 1 எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள். 1

7சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், 1 உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், 1 அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். 1

8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து, 1 தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். 1

9அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; 1 அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. 1

10அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது. 1

11அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும், 1 தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது. 1

12இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, 1 அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? 1

13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, 1 வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது. 1

14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, 1 இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்; 1

15உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், 1 உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும். 1

16அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது; 1 உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள். 1

17உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், 1 உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக. 1

18அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; 1 எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம். 1

19சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; 1 உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், 1 அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

← Psalms 79Read In The App, Free →Psalms 81 →

Study Psalms 80

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150