Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 57

1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; 1 உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; 1 பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன். 1

2எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். 1

3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது, 1 அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா). 1 தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். 1

4என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; 1 தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; 1 அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது. 1

5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; 1 உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 1

6என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; 1 என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா) 1

7என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது, 1 தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன். 1

8என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; 1 அதிகாலையில் விழித்துக்கொள்வேன். 1

9ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; 1 தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 1

10உமது கிருபை வானம்வரையும், 1 உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது. 1

11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; 1 உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

← Psalms 56Read In The App, Free →Psalms 58 →

Study Psalms 57

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150