Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 71

1யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; 1 நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். 1

2உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, 1 என்னைக் காத்தருளும்; 1 உமது செவியை எனக்குச் சாய்த்து, 1 என்னைக் காப்பாற்றும். 1

3நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; 1 என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; 1 நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர். 1

4என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், 1 நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும். 1

5யெகோவா ஆண்டவரே, நீரே என்னுடைய நோக்கமும், 1 என்னுடைய சிறுவயது தொடங்கி என்னுடைய நம்பிக்கையுமாக இருக்கிறீர். 1

6நான் கர்ப்பத்தில் உருவானதுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; 1 என்னுடைய தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; 1 உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன். 1

7அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; 1 நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர். 1

8என்னுடைய வாய் உமது துதியினாலும், 1 நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. 1

9முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், 1 என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். 1

10என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசி, 1 என்னுடைய ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஒன்றாக ஆலோசனைசெய்து: 1

11தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; 1 அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள். 1

12தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்; 1 என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். 1

13என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், 1 எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் வெட்கத்தாலும் மூடப்படவும் வேண்டும். 1

14நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, 1 மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். 1

15என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; 1 அவைகளின் தொகையை நான் அறியவில்லை. 1

16யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; 1 உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன். 1

17தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; 1 இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். 1

18இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், 1 வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை, 1 முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக. 1

19தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, 1 பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? 1

20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, 1 திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர். 1

21என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து, 1 என்னை மறுபடியும் தேற்றுவீர். 1

22என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; 1 இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன். 1

23நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், 1 நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். 1

24எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், 1 நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

← Psalms 70Read In The App, Free →Psalms 72 →

Study Psalms 71

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150