Psalms 77
1நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், 1 என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், 1 அவர் எனக்குச் செவிகொடுத்தார். 1
2என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; 1 இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; 1 என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது. 1
3நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; 1 நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா) 1
4நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; 1 நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன். 1
5ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன். 1
6இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, 1 என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; 1 என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. 1
7ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? 1 இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ? 1
8அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? 1 வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ? 1
9தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? 1 கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா) 1
10அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; 1 ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன். 1
11யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், 1 உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; 1
12உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, 1 உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். 1
13தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; 1 நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? 1
14அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; 1 மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர். 1
15யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, 1 உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா) 1
16தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, 1 தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; 1 ஆழங்களும் கலங்கினது. 1
17மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; 1 ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; 1 உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. 1
18உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; 1 மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. 1
19உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; 1 உமது காலடிகள் தெரியப்படாமல்போனது. 1
20மோசே ஆரோன் என்பவர்களின் கையால், 1 உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.