Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 33

1நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; 1 துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும். 1

2சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, 1 பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள். 1

3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; 1 ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள். 1

4யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், 1 அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. 1

5அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; 1 பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது. 1

6யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், 1 அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. 1

7அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, 1 ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். 1

8பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; 1 உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. 1

9அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். 1

10யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, 1 மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார். 1

11யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், 1 அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். 1

12யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், 1 அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது. 1

13யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். 1

14தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். 1

15அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். 1

16எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; 1 போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான். 1

17காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; 1 அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. 1

18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; 1

19பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், 1 யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. 1

20நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; 1 அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். 1

21அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், 1 நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். 1

22யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

← Psalms 32Read In The App, Free →Psalms 34 →

Study Psalms 33

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150