Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 55

1தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; 1 என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும். 1

2எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; 1 எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும், 1 துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன். 1

3அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு, 1 என்னைப் பகைக்கிறார்கள். 1

4என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது; 1 மரணபயம் என்மேல் விழுந்தது. 1

5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது. 1

6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால், 1 நான் பறந்துபோய் இளைப்பாறுவேன். 1

7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா) 1

8பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன். 1

9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்; 1 கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்; 1

10அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; 1 அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது; 1

11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; 1 கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை. 1

12என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; 1 எனக்கு விரோதமாகப் பெருமை பாராட்டினவன் என்னுடைய பகைஞன் அல்ல, 1 அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். 1

13எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன். 1

14நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து, 1 கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம். 1

15மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; 1 அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; 1 அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. 1

16நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 யெகோவா என்னை காப்பாற்றுவார். 1

17காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்; 1 அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார். 1

18திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; 1 அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி, 1 என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். 1

19ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; 1 அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா) 1

20அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத் 1 தன்னுடைய கையை நீட்டி 1 தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான். 1

21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், 1 அவனுடைய இருதயமோ யுத்தம்; 1 அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். 1 ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். 1

22யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; 1 நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார். 1

23தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்; 1 இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்; 1 நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

← Psalms 54Read In The App, Free →Psalms 56 →

Study Psalms 55

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150