Psalms 86
1யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, 1 என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; 1 நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். 1
2என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும், 1 நான் பக்தியுள்ளவன்; 1 என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். 1
3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 1
4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; 1 ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். 1
5ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், 1 உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர். 1
6யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, 1 என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும். 1
7நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 நீர் என்னைக் கேட்டருளுவீர். 1
8ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; 1 உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை. 1
9ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, 1 உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள். 1
10தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; 1 நீர் ஒருவரே தேவன். 1
11யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், 1 நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; 1 நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும். 1
12என் தேவனாகிய ஆண்டவரே; 1 உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, 1 உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். 1
13நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; 1 என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். 1
14தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், 1 கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், 1 உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள். 1
15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், 1 இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், 1 சத்தியமுமுள்ள தேவன். 1
16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; 1 உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, 1 உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும். 1
17யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து 1 என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, 1 எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.