Psalms 64
1தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; 1 எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும். 1
2துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், 1 அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும். 1
3அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி, 1
4மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; 1 சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள். 1
5அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, 1 மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, 1 அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். 1
6அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, 1 தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்; 1 அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது. 1
7ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், 1 திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள். 1
8அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி 1 அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; 1 அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள். 1
9எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, 1 அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள். 1
10நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; 1 செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.