Psalms 110
1யெகோவா என் ஆண்டவரை நோக்கி: 1 நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும், 1 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார். 1
2யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; 1 நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும். 1
3உமது மகத்துவத்தின் நாளிலே 1 உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்; 1 அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள். 1
4நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி 1 என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்; 1 மனம் மாறாமலுமிருப்பார். 1
5உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர், 1 தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார். 1
6அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்; 1 எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; 1 அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார். 1
7வழியிலே அவர் நதியில் குடிப்பார்; 1 ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.