Psalms 82
1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; 1 தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். 1
2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து, 1 துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா) 1
3ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, 1 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். 1
4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, 1 துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். 1
5அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், 1 இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. 1
6நீங்கள் தெய்வங்கள் என்றும், 1 நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 1
7ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து, 1 உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள். 1
8தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; 1 நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.