Psalms · பரிசுத்த வேதாகம் (தமிழ்)

Psalms 50

1வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, 1 சூரியன் உதிக்கும்திசை தொடங்கி 1 அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். 1

2அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். 1

3நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; 1 அவருக்கு முன்பு அக்கினி அழியும்; 1 அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும். 1

4அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க 1 உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். 1

5பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த 1 என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். 1

6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; 1 தேவனே நியாயாதிபதி. (சேலா) 1

7என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, 1 உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; 1 நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன். 1

8உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; 1 உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 1

9உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், 1 உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. 1

10எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். 1

11மலைகளிலுள்ள + 50:11 ஆகாயத்தின் பறவைகளையெல்லாம் அறிவேன்; 1 வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். 1

12நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; 1 பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. 1

13நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, 1 ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? 1

14நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி; 1

15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; 1 நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 1

16தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், 1 என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. 1

17அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். 1

18நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; 1 விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. 1

19உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், 1 உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது. 1

20நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, 1 உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். 1

21இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், 1 உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; 1 ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, 1 அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். 1

22தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; 1 இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், 1 ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. 1

23நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; 1 தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு 1 தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

← Psalms 49Read In The App, Free →Psalms 51 →

Study Psalms 50

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150