Psalms 4
1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; 1 நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; 1 எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும். 1
2மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, 1 வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா) 1
3பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; 1 நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார். 1
4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; 1 உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா) 1
5நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள். 1
6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; 1 யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். 1
7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, 1 அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர். 1
8சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; 1 யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.